வெண்பாவின் - பொது இலக்கணம் | ||
எழுத்து | - | குறில் நெடில் ஒற்று ஆய்தம் என அனைத்தும் வரும். |
அசை | - | நேர் நிரை என இரண்டும் தனித்தோ கலந்தோ வரலாம். ஈற்றடியின் இறுதி சீரின் இறுதி அசை ‘அதாவது ஓரசைச் சீரில்’ குற்றியலுகரம் கொண்ட ஆசையாக முடிவது சிறப்பு. |
சீர் | - | இயற்சீர் எனப்படும் ஆசிரிய உரிச்சீர் மற்றும் காய்ச்சீர் எனப்படும் வெண்பா உரிச்சீர் வரலாம் ஈற்றடியின் ஈற்று சீர் வெண் சரிதம் எனப்படும் ஓரசைச் சீரான நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று உள்ளதாக வரவேண்டும். |
தளை | - | வெண்டளை மட்டுமே வரவேண்டும். பிரதளைகள் வரக்கூடாது. |
அடி | - | அடி அளவு: ஈற்றடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடியாகவும் இருக்க வேண்டும். அடி எண்ணிக்கை: குறைந்த அளவு இரண்டடியாகவும் அதிக அளவு வெண்பாவின் வகைக்கேற்பவும் அமையும். |
தொடை | - | இரு விகற்பமோ அல்லது பல விகற்பமோ வரலாம். |
வெண்பாவின் உறுப்புகள் : | ||||
விகற்பம் | ||||
தனிச்சொல் | ||||
வெண் சுரிதம் |
வெண்பாவின் ஓசைகள் : | ||
ஏந்திசைச் செப்பலோசை | - | வெண்சீர் வெண்டளையால் மட்டுமே வரும் பா |
தூங்கிசைச் செப்பலோசை | - | இயற்சீர் வெண்டளையால் மட்டுமே வரும் பா |
ஒழுகிசைச் செப்பலோசை | - | வெண்சீர் வெண்டளையாலும் இயற்சீர் வெண்டளையாலும் கலந்து வரும் பா |
வெண்பாவின் வகைகள் : | ||
குறள் வெண்பா | - | வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று இரண்டே அடிகளால் அமைவது |
சிந்தியல் வெண்பா | - | வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று மூன்றே அடிகளால் அமைவது |
அளவடி வெண்பா | - | |
நேரிசை வெண்பா | - | வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று நான்கு அடிகளாலும் இரண்டாவது அடியின் இறுதி சீர் தனிச் சொல்லாகவும் (முதல் இரண்டடியின் விகற்பத்தினை ஒத்தும்) அமைவது |
இன்னிசை வெண்பா | - | வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று நான்கு அடிகளாலும் இரண்டாவது அடியின் இறுதி சீர் தனிச் சொல்லாக இல்லாமலும் (முதல் இரண்டடியின் விகற்பத்தினை ஒத்துப்போகாமல்) அமைவது |
அளவடி வெண்பா | - | |
நேரிசை வெண்பா | - | வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று நான்கு அடிகளாலும் இரண்டாவது அடியின் இறுதி சீர் தனிச் சொல்லாகவும் (முதல் இரண்டடியின் விகற்பத்தினை ஒத்தும்) அமைவது |
இன்னிசை வெண்பா | - | வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று நான்கு அடிகளாலும் இரண்டாவது அடியின் இறுதி சீர் தனிச் சொல்லாக இல்லாமலும் (முதல் இரண்டடியின் விகற்பத்தினை ஒத்துப்போகாமல்) அமைவது |
பஃறொடை வெண்பா | - | வெண்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று பனிரெண்டாடிக்கும் மேலாக பல அடிகளால் அமைந்தும் தனிச்சொல் பெற்றும் பெறாமலும் இரண்டிரண்டு அடிகளை கண்ணிகள் போலும் பல தொடைகளால் தொடுத்தும் அமைவது |
வெண்பாவின் இனங்கள் : | ||||||
வெண்டுறை | ||||||
குறள்வெண் செந்துறை | ||||||
வெளிவிருத்தம் | ||||||
வெண்டாழிசை |
ஆசிரியப்பா - பொது இலக்கணம் | ||
எழுத்து | - | குறில் நெடில் ஒற்று ஆய்தம் என அனைத்தும் வரும். |
அசை | - | நேர் நிரை என இரண்டும் தனித்தோ கலந்தோ வரலாம். ஈற்றடியின் இறுதி சீரின் இறுதி அசை ‘ஏ’, ‘ஓ’, ‘என்’, ‘ஆய்’, ‘ஐ’ எனும் அசைகளில் ஒன்றைக் கொண்டு முடிய வேண்டும், அதிலும் ‘ஏ’ எனும் அசையே சிறப்பானது. |
சீர் | - | ஈரசைச் சீர்களான ஆசிரிய உரிச்சீரே மிகுதியாக வரவேண்டும். மூவசைச் சீர்களில் காய் சீரான வெண்பா உரிச்சீரும் மயங்கி வரலாம், ஆனால் மூவசைச் சீர்களில் கணிச் சீரான வஞ்சி உரிச்சீர் வரக்கூடாது. |
தளை | - | நேரொன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் தளையும் மிகுதியாக வரவேண்டும். அரிதாக பிற தலைகளும் மயங்கி வரலாம். |
அடி | - | அடி அளவு: ஈற்றயல் அடி (இறுதி அடிக்கு முன்பு உள்ள அடி) சிந்தடியாகவும் மற்ற அடிகள் அதன் வகைகளுகேற்பவும் அமையும். அடி எண்ணிக்கை: குறைந்த அளவு மூன்றடி அதிக அளவு வரையறை இல்லை. |
தொடை | - |
ஆசிரியப்பாவின் உறுப்புகள் : |
ஆசிரிய சுரிதம் |
ஆசிரியப்பாவின் ஓசைகள் | ||
ஏந்திசை அகவலோசை | - | நேரொன்றா சிரியத் தளையால் மட்டுமே வரும் பா |
தூங்கிசை அகவலோசை | - | நிரையொன்றா சிரியத் தளையால் மட்டுமே வரும் பா |
ஒழுகிசை அகவலோசை | - | நேரொன்றா சிரியத் தளையாலும் நிரையொன்றா சிரியத் தளையாலும் கலந்து வரும் பா |
ஆசிரியப்பாவின் வகைகள் : | ||
நேரிசை ஆசிரியப்பா | - | ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று, அடி அளவில் ஈற்றயலடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடியாகவும் பெற்று அமைவது ஆகும், ஆசிரியப்பாவின் வகைகளில் இதுவே சிறப்பான ஆசிரியப்பாவாகும். |
இணைகுறள் ஆசிரியப்பா | - | ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று, அடி அளவில், முதலடியும் இறுதி அடியும் அளவடியாகக் கொண்டு ஏனைய அடிகள் குரளடியாகவும் சிந்தடியாகவும் அமைவது ஆகும். |
மண்டில ஆசிரியப்பா | - | |
நிலைமண்டில ஆசிரியப்பா | - | ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று, அடி அளவில் அனைத்து அடிகளும் அளவடிகளாகவே பெற்று வருவது ஆகும். |
அடிமரிமண்டில ஆசிரியப்பா | - | ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அனைத்தும் பெற்று, அடி அளவில் அனைத்து அடிகளும் அளவடிகளாகவே பெற்று, ஆனால் ஒவ்வொரு ஆடியும் பொருள் முற்று பெற்றதாக அமைக்க வேண்டும். அவ்வாறு அமைப்பதனால் அடிகளை முன்னுக்கு பின்னாக மாற்றிப் போட்டாலும் பாடலின் பொருளும் கருத்தும் மாறாததாக இருக்கும். |
ஆசிரியப்பாவின் இனங்கள் : |
ஆசிரியத்துறை |
ஆசிரியவிருத்தம் |
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
ஆசிரியத்தாழிசை |
கலிப்பா - பொது இலக்கணம் | ||
எழுத்து | - | |
அசை | - | |
சீர் | - | ஈரசைச் சீர்களில் கருவிளம் கூவிளம் இடம் பெரும். மூவசைச் சீர்களில் காய்ச்சீரே கலிப்பாவிற்கு உரியது. கணிச்சீரில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் அரிதாக வரலாம். |
தளை | - | கலித்தளை மிகுதியாக வரவேண்டும் அரிதாக பிரதளைகளும் வரலாம். |
அடி | - | அடியளவு: அனைத்து அடிகளும் அளவடியே பெற்று வரும். அடி எண்ணிக்கை: பாவகைக்கு |
தொடை | - |
கலிப்பாவின் உறுப்புகள் : |
தரவு |
தாழிசை |
அராகம் |
அம்போதரங்கம் |
தனிச்சொல் |
சுரிதகம் |
கலிப்பாவின் ஓசைகள் : | ||
ஏந்திசைத் துள்ளலோசை | - | |
தூங்கிசைத் துள்ளலோசை | - | |
பிரிந்திசைத் துள்ளலோசை | - |
கலிப்பாவின் வகைகள் : |
ஒத்தாழிசை கலிப்பா |
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா |
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா |
வன்னக ஒத்தாழிசைக் கலிப்பா |
வெண் கலிப்பா |
கொச்சகக் கலிப்பா |
கொச்சகக் கலிப்பா |
தரவு கொச்சகக் கலிப்பா |
தரவினைக் கொச்சகக் கலிப்பா |
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா |
பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா |
கலிப்பாவின் இனங்கள் : |
கலித்துறை |
கலிவிருத்தம் |
கலித்தாழிசை |
வஞ்சிப்பா - பொது இலக்கணம் | ||
எழுத்து | - | |
அசை | - | |
சீர் | - | கணிச்சீரே மிகுதியாக வரவேண்டும். இதனோடு நாலசைச் சீர்களில் தன்நிழர்ச் சீரும் நறுநிழர்ச் சீரும் வரலாம். |
தளை | - | ஒன்றிய வஞ்சித்தளை ஒன்றாத வஞ்சித்தளை ஆகிய இரண்டும் பா முழுவதும் தனித்தோ அல்லது கலந்தோ வரலாம். |
அடி | - | அடியளவு: ஒரு பா முழுவதும் குறளடியோ அல்லது சிந்தடியோ வரவேண்டும். அடிஎண்ணிக்கை: இரண்டு அல்லது மூன்று முதல் வரையறை இன்றி. |
தொடை | - |
வஞ்சிப்பாவின் உறுப்புகள் : |
தனிச்சொல் |
சுரிதம் |
வஞ்சிப்பாவின் ஓசைகள் : | ||
ஏந்திசைத் தூங்கலோசை | - | ஒன்றிய வஞ்சித்தளை மட்டுமே வருவது. |
அகவல் தூங்கலோசை | - | ஒன்றாத வஞ்சித்தளை மட்டுமே வருவது. |
பிரிந்திசைத் தூங்கலோசை | - | இவ்விரு தலைகளோடு பிரதளைகளும் கலந்து வருவது. |
வஞ்சிப்பாவின் வகைகள் : |
குறளடி வஞ்சிப்பா |
சிந்தடி வஞ்சிப்பா |
வஞ்சிப்பாவின் இனங்கள் : |
வஞ்சித்துறை |
வஞ்சிவிருத்தம் |
வஞ்சித்தாழிசை |