விநாயகர் அகவல்

Updated: Wednesday, Feb 10 2021

விநாயகர் என்னும் இந்துக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். இது ஆசிரியப்பாவில் நிலைமண்டில ஆசிரியப்பா என்னும் வகையைச் சேர்ந்தது. ஆசிரியப்பாவை அகவற்பா என்றும் வழங்குவர். எனவே இது விநாயகர் அகவல் என்று பெயர் பெற்றது

நல்வழி

Updated: Wednesday, Feb 10 2021

மக்கள் அறச் சிந்தனையோடு வாழ வேண்டி எழுதப்பட்ட நூல். இது வெண்பாவில் நேரிசை அளவுடை வெண்பா என்னும் வகையைச் சேர்ந்தது. இது இறைவணக்கம் ஒரு பாடலும், நூலில் நாற்பது பாடலும் கொண்ட நாற்பது என்ற சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. மொத்தம் நாற்பத்தியொரு பாடல் கொண்டது.

சிவபுராணம்

Updated: Wednesday, Feb 10 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.